இந்தியா
துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- தங்கம் கடத்தி வந்த 3 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் உடலுக்குள் காப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
3 பேரிடம் இருந்தும் மொத்தம் 1015.80 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.28 கோடியாகும். இதனை கடத்தி வந்த 3 பயணிகளையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.