இந்தியா

OLA-வை ஓரங்கட்டிய RAPIDO.. எங்கள் பிரதான போட்டியாளர் இவங்கதான் - பிரமித்த UBER சி.இ.ஓ

Published On 2025-08-24 16:23 IST   |   Update On 2025-08-24 16:23:00 IST
  • பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.
  • ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கிறது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஊபர் (UBER) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக டாரா கோஸ்ரோஷாஹி உள்ளார். இந்நிறுவனம் கார் டேக்ஸி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தங்கள் பிரதான போட்டியாளராக இருந்த ஓலா (OLA) நிறுவனத்தை முந்தி ராபிடோ (Rapido) நிறுவனம் தங்களுக்கு பிரதான போட்டியாளராக மாறியுள்ளதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, ஓலா நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர், ஓட்டுநர் கமிஷன் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.

 

மறுபுறம், 2015-ல் துவங்கப்பட்ட ராபிடோ நிறுவனம், முதலில் இரு சக்கர வாகன டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி சந்தையில் விரைவாக வலுவான இடத்தைப் பிடித்தது. பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.

குறைந்த கமிஷன் கட்டணமே ராபிடோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கும் நிலையில், ராபிடோ 0-5% மட்டுமே வசூலிக்கிறது. ராபிடோ தளத்தில் மாதம் 20 லட்சம் ஓட்டுநர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News