ஆந்திராவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் செல்போன் ஆப்
- புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.
- செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.
ஆந்திராவில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்வதற்காக நகராட்சி நிர்வாகத் துறை புரமித்ரா என்ற செல்போன் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுத்து இந்த ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் பிரச்சினையை ஆய்வு செய்ய வருகிறார்கள். சிறிய பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. பெரிய பிரச்சினைகள் 3 முதல் 15 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 3 மாதங்களில் மக்கள் 10,421 பிரச்சினைகளுக்கு பதிலளித்தனர். இவற்றில் இதுவரை 9889 தீர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்க்கப்படாவிட்டால், அதிகாரிகளே பொறுப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.