இந்தியா
பிறந்தநாளில் கண் கலங்கிய ஜனாதிபதி முர்மு: காரணம் இதுதான்
- ஜனாதிபதி முர்மு பிறந்தநாளில் பார்வையற்ற குழந்தைகள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
- இதை பார்த்த ஜனாதிபதி கண் கலங்கி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்த நாளன்று பிரதமர் மோடி உள்பட பல்வேறு மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தை பார்வையிட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அங்குள்ள குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்தனர். இதைக் கண்ட ஜனாதிபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கி அழுதார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.