இந்தியா
ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வருகிறார்- கேரள மந்திரி தகவல்
- துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு எந்த நாளில் வந்தாலும் அவரை வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வர உள்ளதாக தெரிவித்தார்.
துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர இருப்பதாகவும், இது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில், சரியான தேதி விவரம் தெரிய வரவில்லை. அதேநேரம் அவர் எந்த நாளில் வந்தாலும் வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.