இந்தியா
ஆன்லைன் கேமிங் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. அமலுக்கு வந்த தடை
- புதிய கேமிங் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
- தடையை மீறி பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக மாறியுள்ளது.
இதன்மூலம் பணம் செலுத்தி விளையாடும் ரம்மி, போக்கர், பெட்டிங் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை அமலானது.
தடையை மீறி பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.