இந்தியா

உங்களுடன் தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுங்கள்: ஏக்நாத் ஷிண்டே சவால்

Update: 2022-06-29 02:12 GMT
  • தங்களது சொந்த லாபத்திற்காக இங்கு யாரும் இல்லை.
  • இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சந்தோஷமாக, நன்றாக உள்ளனர்.

மும்பை :

சிவசேனாவுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டுள்ள மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர் தங்கி உள்ள ஓட்டலுக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் விரைவில் மும்பை வருவேன். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்துத்வாவை முன்எடுத்து செல்வதற்காக அவர்களின் சொந்த விருப்பத்தில் பேரில் இங்கு வந்து உள்ளனர். சிலர் (சிவசேனா தலைமை) எங்களுடன் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி இருந்தால் அந்த எம்.எல்.ஏ.க்களின் பெயரை அவர்கள் வெளியிட வேண்டும்.

பால்தாக்கரேவின் கனவான சிவசேனாவை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அவரின் இந்துத்வா பாதையில் நாங்கள் தொடர்ந்து நடப்போம். இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சந்தோஷமாக, நன்றாக உள்ளனர். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களது சொந்த லாபத்திற்காக இங்கு யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல ஏக்நாத் ஷிண்டே முகாமில் உள்ள மந்திரி உதய் சாமந்த் கூறுகையில், "மும்பையில் உள்ள எந்த ஒரு சிவசேனா தலைவர்களுடனும் நாங்கள் தொடர்பில் இல்லை. நாங்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் மட்டுமே தொடர்பில் உள்ளோம்" என்றார்.

அதிருப்தி முகாமில் உள்ள 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News