சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.