இந்தியா
null

குஜராத்-இன் முதல் எய்ம்ஸ் - வருகிற 25-ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Published On 2024-02-23 16:30 GMT   |   Update On 2024-02-24 06:52 GMT
  • 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது.
  • இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன.

குஜராத் மாநிலத்தின் முதல் ஏய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ந்தேதி திறந்து வைக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ் பட்டேல் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ரிஷிகேட் பட்டேல், "201 ஏக்கர்கள் பரப்பளவில் உருவாகி இருக்கும் ராஜ்கோட் ஏய்ம்ஸ் மருத்துவமனை 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன."

"இதே நாளில் 23 ஆபரேஷன் தியேட்டர்கள், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் வளாகம், 250 படுக்கைகளை கொண்ட ஐ.பி.டி. உள்ளிட்டவைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மற்ற படுக்கைகள் நாளடைவில் பயன்பாட்டிற்கு வரும்," என்று தெரிவித்தார்.

இதற்காக குஜராத் செல்லும் பிரதமர் மோடி ஏய்ம்ஸ் மருத்துவமனையுடன் ஒகா மற்றும் பெய்ட் துவாரகா இடையிலான பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். 

Tags:    

Similar News