இந்தியா

சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2023-07-17 00:59 IST   |   Update On 2023-07-17 00:59:00 IST
  • சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பூடான் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
  • சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது என்றார் பிரதமர் மோடி.

புதுடெல்லி:

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன.

இதற்கிடையே, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் இந்தியாவுக்கும், மனித குலத்துக்கும் சிறப்பாக பயனளிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பூடான் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதில் டுவீட்டில், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News