இந்தியா

"இரட்டை எஞ்ஜின் அரசின் முன்னுரிமை பெண்களின் நலனே.."- பிரதமர் மோடி

Published On 2024-03-10 10:22 GMT   |   Update On 2024-03-10 10:22 GMT
  • பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
  • பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது.

சத்தீஸ்கரில் பெண்களுக்கு பண உதவி வழங்கும் 'மஹ்தாரி வந்தன்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், "இரட்டை எஞ்ஜின்" அரசாங்கத்தின் முன்னுரிமை பெண்களின் நலனே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, "நாட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கு தனது அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது" என கூறினார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

நரி சக்தியை மேம்படுத்தும் நோக்கில் மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்து இன்று பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (திருமணமான பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி வரவு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக நான் இன்று உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில காரணமாக நான் உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன். அவர், உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவார்.

தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் (மத்திய மற்றும் மாநிலத்தின்) முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே.

பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News