இந்தியா

பிரதமர் மோடி

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி

Published On 2022-08-11 13:05 IST   |   Update On 2022-08-11 13:05:00 IST
  • சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம்.
  • நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பணியை மேற்கொண்டு உள்ளது.

பானிபட்:

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பானிபட்டில் அமைக்கப்பட்டு உள்ள ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம்.

இந்த மாதிரி இலவச திட்டங்களை அறிவிப்பதால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்.

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றி விடும். புதிய தொழில் நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கமும், உறுதிப்பாடும் தேவை.

அரசியல் சுயநலத்துக்காக குறுக்கு வழிகளை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைதட்டல் மற்றும் அரசியல் ஆதாயங்களை பெறலாமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பணியை மேற்கொண்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News