கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதவில், "கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. அனிதா ஆனந்த் அவர்களை வரவேற்றேன்.
பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழுமைக்காக வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜெய்சங்கரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அனிதா ஆனந்த் கூறும்போது, "இந்தியா- கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்" என தெரிவித்திருந்தார்.