இந்தியா

பிரதமர் மோடி, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

இஸ்ரேல் சுதந்திர தினம் - பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2023-04-26 19:14 GMT   |   Update On 2023-04-26 19:14 GMT
  • இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
  • பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி:

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல் அளித்தார்

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் 75-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சுதந்திர தினம் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளில் எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எனது இதயபூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News