இந்தியா

 ப.சிதம்பரம், முன்னாள் நிதிமந்திரி

இந்தியாவில் மதச்சார்பின்மை எண்ணம் சிதைக்கப்பட்டு விட்டது- ப.சிதம்பரம்

Published On 2022-11-19 15:15 GMT   |   Update On 2022-11-19 15:15 GMT
  • இந்தியாவை சேதப்படுத்தும் எதையும் முந்தைய அரசு செய்யவில்லை.
  • பலர் பயத்தின் காரணமாக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுகிறார்கள்.

தனியார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பம் கூறியுள்ளதாவது:

கடந்த சில ஆண்டுகளாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற எண்ணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற எண்ணம் சிதைக்கப்பட்டு, ஒரு மதத்தைத் தழுவுவது என்று சுருக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தூண்களும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். பலர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுகிறார்கள், மாறவில்லை என்றால் குடும்பத்தினர் துன்புறுத்தப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் உள்ளனர்.

முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவை சேதப்படுத்தும் எதையும் செய்யவில்லை, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு, கல்விக்கோ, விளையாட்டிற்கோ கூட தவறுகளை நாங்கள் செய்துள்ளோம். அவை ஆட்சியின் தோல்விகள்.  ஆனால், இந்தியாவுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நாங்கள் எதையும் செய்யவில்லை.

இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவானது, ஆனால் மிகவும் தீவிரமானது மற்றும் மிகவும் கவலையானது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா குறித்த பொதுவான எண்ணத்தை சிதைக்கும் வகையில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில், சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் நாடு இந்தியா என்பது இடம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களில் இவை மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

அவற்றில சில சரி செய்ய முடியாதவை. உதாரணமாக, மதச்சார்பின்மை மோசமாக சேதமடைந்துள்ளது. அதாவது இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News