இந்தியா

கோப்புப் படம்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை - பாட்னா ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-05-04 15:26 IST   |   Update On 2023-05-04 15:26:00 IST
  • பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
  • முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து, தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

Tags:    

Similar News