இந்தியா
7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவு
- 5 வயதுக்குட்பட்ட காலத்தில் ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
- பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ஆதார் ஆணையம் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
புதுடெல்லி:
5 வயதுக்கு உட்பட்ட காலத்தில் ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதை கடந்த பிறகு ஆதாரில் உள்ள அவர்களின் கைரேகைகள், கருவிழி பதிவு விவரங்களை (பயோமெட்ரிக்) புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களது ஆதார் செயல் இழந்துவிடும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ஆதார் ஆணையம் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.