பாகிஸ்தான் தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் பெண் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்
- இந்திய ராணுவம் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக அழித்தது.
- வடக்கு காஷ்மீரின் உரி மற்றும் குப்வாரா பகுதிகளில் எல்லைப் பகுதிகள் தொடர் தாக்குதல் நடக்கிறது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லையோர இந்திய நகரங்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லையோர இந்திய மாநிலங்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக அழித்தது.
தாக்குதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஸேர்வானியில் இருந்து பாரமுல்லா நோக்கிச் சென்ற வாகனம் மொஹுரா அருகே ஒரு ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில், ரஸேர்வானியை சேர்ந்த பஷீர் கானின் மனைவி நர்கீஸ் பேகம் உயிரிழந்தார். ரஸேர்வானியின் சேர்ந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக பாரமுல்லாவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த சில நாட்களாக வடக்கு காஷ்மீரின் உரி மற்றும் குப்வாரா பகுதிகளில் குடிமக்கள் இருப்பிடங்கள் உள்ள எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது.