இந்தியா

திருப்பதி கோவில் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்க அதிகாரிகள் ஆய்வு

Published On 2024-03-14 05:05 GMT   |   Update On 2024-03-14 05:05 GMT
  • கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர், முதன்மை செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு முன்பாக உள்ள ஜெய விஜயா கதவுகளுக்கு தங்கத் தகடுகள் பதிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். தங்க தகடுகள் பதிக்கும் பணி தள்ளி போய்க்கொண்டே உள்ளது.

இந்த நிலையில் கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகரன் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்கு எவ்வளவு தங்கம் தேவைப்படுகிறது. இதற்கான தங்கத்தை தேவஸ்தானத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தில் பதிப்பதா அல்லது பக்தர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறுவதா? என ஆலோசனை நடத்தினர்.

திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News