8வது இடத்தில் நிதிஷ் குமார்.. இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வா்கள் பட்டியல் இதோ!
- தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்தில் உள்ளார்.
- பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றுள்ளார்.
இந்தியாவில் அவரை போல அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தவர்களின் பட்டியல் கவனம் பெற்று வருகிறது.
அதனபடி, சிக்கிம் மாநிலத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பவன் குமார் சாம்லிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒடிசாவை 24 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 23 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜோதி பாசு 3வது இடத்திலும், அருணாசல பிரதேச முதல்வராக 22 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கோகாங் அபாங் 4வது இடத்திலும் உள்ளனர்.
5வது இடத்தில மிசோராமை 22 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட லால் தன்ஹாவ்லாவும், 6வது இடத்தில் ஹிமாச்சல பிரதேசத்தை 21 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட வீரபத்ர சிங் -உம் உள்ளனர்.
திரிபுரா முதல்வராக 19 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த மாணிக் சர்க்கார் 7வது இடத்தில் உள்ளார். பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்திலும் பஞ்சாபை 18 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரகாஷ் சிங் பாதல் 10வது இடத்திலும் உள்ளனர்.