இந்தியா

மணிப்பூர் வீடியோவை நீக்க வேண்டும் - டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

Published On 2023-07-20 12:31 GMT   |   Update On 2023-07-20 12:31 GMT
  • வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.
  • மணிப்பூர் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி:

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதற்கிடையே, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் இதுபோன்ற வீடியோக்களை டுவிட்டர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தும் வீடியோக்களை காட்டுவதால், டுவிட்டருக்கு எதிராக இந்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவாமல் இருக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோவை நீக்கவேண்டும் எனக் கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Tags:    

Similar News