இந்தியா

ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

Published On 2024-06-09 12:11 IST   |   Update On 2024-06-09 12:11:00 IST
  • திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ்.
  • ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.

ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து இன்று காலை ராமோஜி ராவுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது. வீட்டில் இருந்து ஊர்வலமாக ராமோஜி பிலிம் சிட்டி முழுவதும் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ராமோஜி ராவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

அவர்களை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


Tags:    

Similar News