நிதிஷ் குமாரை துணை பிரதமராக்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் சொல்கிறார்
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு அளப்பரியது.
- கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை வலுப்படுத்தி வருகிறார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை துணை பிரதமராக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஷ்வினி குமார் சவுபே தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவர் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மந்திரி சபையிலும் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அஷ்வினி குமார் சவுபே கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு அளப்பரியது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை வலுப்படுத்தி வருகிறார். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நிதிஷ் குமார் துணை பிரதமராக வேண்டும். என்னுடைய ஆசை நிறைவேறினால் பாபு ஜக்விஜயன் ராமிற்குப் பிறகு பீகார் 2ஆவது துணை பிரதமரை பார்க்கும்." என்றார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஜக்விஜயன் ராம் இதற்கு முன்னதாக துணை பிரதமாக பதவியில் இருந்துள்ளார்.