இந்தியா
தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி சுட்டுக் கொலை
- துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
- துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சரண்டா காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் மாவோயிஸ்ட் இயக்க மண்டலத் தளபதி அமித் ஹன்ஸ்தா என்கிற அப்தான் என்பது தெரியவந்தது. இவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
மோதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கி சண்டையின்போது மற்ற மாவோயிஸ்டுக்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.