இந்தியா

மதிப்பு வாய்ந்த முதல் இடத்தில் "மாங்காய் ஊறுகாய்"

Published On 2023-12-12 07:05 GMT   |   Update On 2023-12-12 07:11 GMT
  • பட்டியலில், பண்டிகை கால உணவு தயாரிப்புகள் முதல் பத்தில் இடம் பெற்றன
  • மாங்காயை பலவிதங்களில் உணவுக்கு சுவை சேர்க்க மக்கள் பயன்படுத்துகின்றனர்

உலகெங்கும் பிரபலமான கூகுள் (Google) தேடுதல் எந்திரத்தைத்தான் இணையதளங்களில் தங்கள் தகவல் தேடுதலுக்கு பெரும்பான்மையான பயனர்கள் நம்புகிறார்கள்.

இதில் பயனர்கள் தேடும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களால் அதிகம் தேடப்பட்ட சொல் அல்லது சொற்றொடர் எது என கூகுள் நிறுவனம் வெளியிடும். இதில் பல்வேறு துறை சார்ந்த சொற்களின் பட்டியல் அடங்கும்.

அதன்படி, 2023 ஆண்டிற்கான பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இதில் உணவு தயாரிப்புகள் குறித்து அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்கள் பட்டியல் வழக்கமாக இந்தியர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும்.

இப்பட்டியலில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பரிமாறப்படும் உகாடி பச்சிடி, வினாயக சதுர்த்தி அன்று தயாரிக்கப்படும் கொழுக்கட்டை, திருவாதிரை களி, வட இந்திய உணவான தனியா பஞ்சிரி, பஞ்சாமிர்தம் என பல பொருட்கள் முதல் 10 சொற்களில் இடம் பிடித்துள்ளன.

ஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து அதிகம் பேரால் தேடப்பட்ட உணவு சொற்றொடர் எனும் புகழை பெற்று "மாங்காய் ஊறுகாய்" முதலிடம் பிடித்துள்ளது. இத்தகவல் சமூக வலைதளங்களில் பயனர்களால் சுவாரஸ்யமாக விவாதிக்கப்படுகிறது.

தமிழர்களின் அன்றாட உணவு பட்டியலில் மாங்காய்களுக்கு தனி இடம் உண்டு.


நீரில் சுத்தம் செய்து கடித்து உண்ணுதல், துண்டு துண்டாக நறுக்கி உப்பு சேர்த்து உண்ணுதல், வெயிலில் காய வைத்து உலர்த்தி உப்பு கலந்து உண்ணுதல், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து உண்ணுதல் ஆகியவை மட்டுமல்லாமல் பலவித வழிமுறைகளில் ஊறுகாயாக உருவாக்கி சிற்றுண்டி, மதிய மற்றும் இரவு உணவுகளுக்கும், விருந்தோம்பலுக்கும் பயன்படுத்தப்பட கூடிய ஒரு சிறப்பிடம் மாங்காய்க்கு உண்டு.

மேலும், சிறுவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என பலருக்கும் மாங்காய் ஊறுகாய் விருப்பமான ஒன்று என்பதால் அதை உருவாக்கும் முறை, இணைய தேடலில் முதலிடம் பிடித்தது எதிர்பார்க்க கூடியதுதான் என பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News