இந்தியா
null

ஒரு உண்மையான வாக்காளர் பெயர் நீக்கப்பட்டாலும்., மம்தா பகிரங்க எச்சரிக்கை

Published On 2025-11-04 21:40 IST   |   Update On 2025-11-05 08:51:00 IST
  • பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது.
  • ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.

தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி "SIR 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி" என விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திய SIR இன் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.

பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.

அடுத்த வருடம் அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. மத்தியில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.

Tags:    

Similar News