இந்தியா

வாக்களித்ததற்காக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு சான்றிதழ்: ஏன் தெரியுமா?

Published On 2024-05-25 06:51 GMT   |   Update On 2024-05-25 09:42 GMT
  • மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம்.
  • மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். இதேபோல் தலைமை தேர்தல் அதிகாரிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருடைய பெயர் இடம் பிடித்துள்ள வாக்குச்சாவடியில் இவர்தான் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வாக்களித்த பின் ஜெய்சங்கர் கூறியதாவது:-

இந்த பூத்தில் நான் முதல் ஆண் வாக்காளராக வாக்களித்துள்ளேன். இதனால் வாக்களித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம். மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News