லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1
ராக்கெட்டின் 3ம் கட்ட செயல்பாடு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.
2வது கட்ட செயல்பாடு இயல்பாக நடந்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தொடர்ந்து, ஆதித்யா எல்1 லெக்ராஞ்சி புள்ளியை நோக்கி பயணிக்கும்.
அடுத்த 63 நிமிடங்களில் பூமியில் இருந்து 19,500 கி.மீ உயரத்தில் சுற்றுவட்ட பாதையை அடையும்.
சூரியனை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1.
ஆதித்யா எல் 1 குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், " தொழில்நுட்ப ரீதியாக எல் 1 சரியான புள்ளியில் நிற்பதும், அதைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டிருப்பதும், அது மிகவும் துல்லியமான கண்டுபிடிப்புத் தேவைகளுடன் ஐந்தாண்டுகள் உயிர்வாழ்வதும் மிகவும் சவாலானது. இது விஞ்ஞான ரீதியாக பலனளிக்கும். ஏனென்றால் ஏழு கருவிகள் அங்கு என்ன நடக்கிறது என்பதன் இயக்கவியல் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்" என்றார்.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்டவை சூரிய ஆய்வில் உள்ளன. அமெரிக்காவின் நாசா மட்டுமே அதிகபட்சமாக 14 சூரிய பயணங்களை மேற்கொண்டுள்ளது.
7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க 7 முக்கிய கருவிகளை விண்கலம் சுமந்து செல்கிறது.