இந்தியா

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் தோல்வி

Published On 2025-11-14 20:53 IST   |   Update On 2025-11-14 20:53:00 IST
  • இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
  • சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆர்ஜேடியின் லாலு பிரசாத் உடைய மூத்த மகனும் தேஜஸ்வியின் சகோதரனுமான தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளார்.

ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில், இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.

இதையடுத்து அவரை ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு பிரசாத் நீக்கினார். இதை தொடர்ந்து ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அந்த தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்ஜேடியின் முகேஷ் ரோஷன் 42,644 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.  

Tags:    

Similar News