இந்தியா
null

சிங்கப்பூர் ராணுவ பயிற்சியில் சேரும் லல்லுவின் பேரன்

Published On 2026-01-07 16:40 IST   |   Update On 2026-01-07 16:40:00 IST
  • வாழ்வின் கடினமான போர்களில் வீரர்கள் உருவாகிறார்கள் என்பதை மட்டும் நினைவுகொள்.
  • சிங்கப்பூரில் 2-ம் தலைமுறை குடியிருப்பாளர்களாக உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலுபிரசாத் யாதவ்-ராப்ரி தேவி தம்பதியின் 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா. இவரது மகன் ஆதித்யா சிங்கப்பூரில் ராணுவத்தில் அடிப்படை பயிற்சி பெற உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரோகிணி ஆச்சார்யா கூறியதாவது:-

எனது நெஞ்சம் இன்று பெருமையடைந்துள்ளது. பல்கலைக் கழகத்திற்கு முந்தைய படிப்புகளை முடித்து எங்கள் மூத்த மகன் ஆதித்யா 2 ஆண்டுகள் அடிப்படை ராணுவப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

ஆதித்யா, நீ தைரியமானவன். ஒழுக்கமானவன். அற்புதங்களைச் செய்து திரும்ப வேண்டும். வாழ்வின் கடினமான போர்களில் வீரர்கள் உருவாகிறார்கள் என்பதை மட்டும் நினைவுகொள். எங்களின் அன்பும் ஊக்கமும் என்றும் உன்னுடன் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள ஆண் குடிமக்கள் அனைவரும் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு கட்டாயம் ராணுவப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். சிங்கப்பூரில் 2-ம் தலைமுறை குடியிருப்பாளர்களாக உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். அதன்படி ஆதித்யா சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் இணைய உள்ளார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News