இந்தியா

உத்தரபிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு பல லட்சம் பேர் காத்திருப்பு: வருண் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-10-30 02:20 GMT   |   Update On 2022-10-30 02:20 GMT
  • போலீஸ் வேலைக்கு 4 ஆண்டுகளாக காத்திருந்திருக்கும் இளைஞர்கள்.
  • இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர்.

புதுடெல்லி :

உத்தரபிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, அந்த மாநிலத்தில் போலீஸ் வேலைக்கு இளைஞர்கள் 4 ஆண்டுகளாக காத்திருந்தும் பலனில்லை என சாடி இருக்கிறார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், " போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படவில்லை. நம்பிக்கையும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர். ஆனால் நிவாரணம்தான் கிடைப்பதாக இல்லை. ஆனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடினால் அவர்கள் தொந்தரவு செய்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இது அநீதி இல்லையா?" என கூறி உள்ளார்.

வருண்காந்தி, பா.ஜ.க. எம்.பி. என்றபோதும், அந்தக் கட்சியின் மத்திய, உ.பி. மாநில அரசுகளை பல்வேறு விஷயங்களில் சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News