விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது- கேரள மந்திரி அனில் குற்றச்சாட்டு
- விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலனை கேரள அரசு செய்துள்ளது.
- நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் அரிசிக்கு அதிக ஆதரவு விலை உள்ளது.
திருவனந்தபுரம்:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் கார்ப்பரேட்டு கம்பெனிகளை வாழ வைப்பதாக கேரள மந்திரி அனில் குற்றம் சாட்டி உள்ளார், இது தொடர்பாக கூட்டம் ஓன்றில் பேசிய அவர், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு அவர்களை வஞ்சித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கும், பேராசைக்கும் இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பலி கொடுத்து வருகின்றனர் என்றார்.
விளை பொருட்களுக்கு ஆதரவு விலை வழங்குவோம் என்ற சுவாமிநாதான் கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற முடியாமல் கடந்த 5 ஆண்டுகளை மோடி அரசு கடந்துள்ளது. விவசாயத்துறையில் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் முன்மாதிரியாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலனை கேரள அரசு செய்துள்ளது. நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் அரிசிக்கு அதிக ஆதரவு விலை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.