இந்தியா

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: கார் கழுவினால் ரூ.5000 அபராதம்

Published On 2024-03-08 10:01 IST   |   Update On 2024-03-08 11:20:00 IST
  • பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
  • தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணிக்கு குடிநீரை பயன்படுத்த தடை.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. கர்காடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தனது வீட்டின் ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் வறண்டு விட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் பெங்களூரு மக்களுக்கு குடிநீர் கிடைக்க அம்மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா நீர் வாரியம் குடிதண்ணீரை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கார் கழுவுதல், தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு குடிநீரை பயன்படுத்த கர்நாடகா நீர் வாரியம் தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை சரியான அளவிற்கு பெய்யாத காரணத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News