இந்தியா

மாணவிகளை பலாத்காரம் செய்ததாக மடாதிபதி மீது போக்சோ வழக்கு

Published On 2022-08-28 08:52 IST   |   Update On 2022-08-28 08:52:00 IST
  • 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு.
  • மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சித்ரதுர்கா முருக மடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் தங்கி படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூருவில் உள்ள சமூக சேவை அமைப்பில் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் மைசூரு நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக சித்ரதுர்காவில் உள்ள அக்கமாதேவி வஸ்தி நிலையத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News