இந்தியா
VIDEO: காப்பாற்ற முயன்ற போது கடித்த நாய்க்குட்டி - ரேபிஸ் நோய் பாதித்து கபடி வீரர் உயிரிழப்பு
- கபடி வீரர் கால்வாயில் இருந்து நாய்க் குட்டியை காப்பாற்றினார்.
- நாய்க்குட்டி கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான கபடி வீரர் ப்ரஜேஸ் சோலாங்கி ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ப்ரஜேஸ் சோலாங்கி கால்வாயில் இருந்து ஒரு நாய்க் குட்டியை காப்பாற்றியுள்ளார். அப்போது நாய்க்குட்டி கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரேபிஸ் தடுப்பூசி போடாமலும் இருந்த அவர் தொற்று முற்றிய நிலையில் படுக்கையில் துடிதுடித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.