இந்தியா

பொட்டு வைத்ததால் அடி, மாணவி தற்கொலை: ஆசிரியர் கைது

Published On 2023-07-12 08:14 IST   |   Update On 2023-07-13 06:28:00 IST
  • பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியர் அடித்ததாக குற்றச்சாட்டு
  • பெற்றோர் போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசயத்தை குழந்தைகள் பாதுகாப்பு உரிமைக்கான தேசிய ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எங்கள் குழு தான்பாத் செல்லும் என அதன் தலைவர் பிரியங் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

மேலும், ''இது மிகவும் கவனிக்க வேண்டிய சம்பவம். அந்த பள்ளி சிபிஎஸ்சி-க்கான அங்கீகாரம் பெறவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளேன். நான் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சந்திக்க இருக்கிறேன்'' என்றார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் தன்பாத் தெலுல்மாரி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

Tags:    

Similar News