இந்தியா
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் பறிமுதல்
- ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் மீது மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய ஜெகன் மோகனின் புல்லட்ப்ரூப் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.