இந்தியா
4ஆவது காலாண்டில் 3,068 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இண்டிகோ
- மொத்த வருமானம் 23,097.5 கோடி ரூபாய்.
- 31.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
2024-25 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இண்டிகோ நிறுவனம் 3,068 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அதன் தாய் நிறுவனமான இன்டர்குளோப் (InterGlobe) தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 1,894.8 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிலையில், தற்போது 62 சதவீதம் அதிகரித்து 3,068 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இண்டிகோவில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 19.6 சதவீதம் அதிகரித்து 31.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.
மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 18,505.1 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 23,097.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2024-2025 நிதியாண்டில் 11.8 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக இண்டிகோ சிஇஓ பீட்டர எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.