இந்தியா

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு திருமணம்: கேரள முதல்-மந்திரி வாழ்த்து

Published On 2022-09-05 08:02 IST   |   Update On 2022-09-05 08:02:00 IST
  • ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது.
  • ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது.

திருவனந்தபுரம் :

கேரளாவில் 2021-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்தியாவின் இளம் பெண் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆர்யா ராஜேந்திரன், கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வான கோழிக்கோடு பாலுச்சேரி எம்.எல்.ஏ. சச்சின் தேவ் (28) ஆகியோர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, அதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தனர். இருவரும் கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் நேற்று ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது. இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவிற்கு பரிசு எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று மணமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். மேலும் அதை மீறி வழங்க விரும்புபவர்கள் முதியோர் இல்லத்திலோ, மாநகராட்சிக்கோ அல்லது முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் என்று அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News