இந்தியா

ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்யும் இந்திய பெண்கள்

Published On 2024-03-24 05:34 GMT   |   Update On 2024-03-24 05:34 GMT
  • 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
  • படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) மற்றும் டாடா இன்ஸ்டியூடிட் சோசியல் சைன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.

இதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்வது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளுக்கு 98 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.

அவர்களுடன் ஒப்பிடுகையில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.

இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்கள் ஊதியம் இல்லா வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பில் ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

இருப்பினும் படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட 3 மடங்கு அதிக நேரத்தை வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று குடும்பம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வயது குழந்தைகளின் இருப்பு, ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் வாழும் பெண்கள் சராசரியாக, பல தலைமுறை குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக ஊதியம் பெறாத வேலைகளை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News