இந்தியா
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
- ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிமகிரி, ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டன.
இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஹிமகிரி கப்பல் கொல்கத்தாவில் கட்டப்பட்டது. உதயகிரி மும்பையில் கட்டப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அர்ப்பணிக்கும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.