இந்தியா
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் கீழே விழுந்தது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.