இந்தியா

2030-ல் இந்தியாவுக்கு சுமார் 1 லட்சம் நிறுவன செயலாளர்கள் தேவையிருக்கும்: ஐ.சி.எஸ்.ஐ.

Published On 2024-08-19 13:28 IST   |   Update On 2024-08-19 13:28:00 IST
  • 73 ஆயிரம் நிறுவன செயலாளர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிறுவன செயலாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • வருடத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு செயலாளர்களுக்கான உறுப்பினர் தகுதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் 2030-க்குள் சுமார் ஒரு லட்சம் நிறுவன செயலாளர் தேவையிருக்கும் என ஐ.சி.எஸ்.ஐ. (Institute of Company Secretaries of India) தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்காக தேவை அதிகரிக்கும் என ஐ.சி.எஸ்.ஐ. தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனத்தின் நிர்வாகத்தை கட்டமைப்பது உள்ளிட்டவைகளில் நிறுவன செயலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வருடத்திற்கு 2,500 பேர் என்ற அளவில் ஐசிஎஸ்ஐ செயலாளர்கள் உறுப்பினர் வழங்கி வருகிறது. 2030-ல் இந்தியா 7 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாகும் என எதிர்பார்க்கப்படுகுறது.

மேலும் இளம் திறமையாளர்களை தொழிலில் ஈர்ப்பதற்காக, நிறுவன செயலர் நிர்வாக திட்டத்தில் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை நேரடியாக பதிவு செய்ய தொடங்கியுள்ளது.

கார்ப்பரேட் போர்டுகளில் பின்பற்றப்படும் செயலக நடைமுறைகளில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவர ஐ.சி.எஸ்.ஐ. செயலக தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

73 ஆயிரம் நிறுவன செயலாளர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிறுவன செயலாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News