இந்தியா

ஆந்திராவில் தெருவில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்து குளத்தில் தள்ளிவிட்ட வாலிபர்

Published On 2023-09-01 11:28 IST   |   Update On 2023-09-01 11:28:00 IST
  • வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.

அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.

சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News