இந்தியா

அரியானாவில் காங்கிரஸ் தலைவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Published On 2024-01-04 10:41 IST   |   Update On 2024-01-04 10:41:00 IST
  • யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் உள்ளிட்ட நகரங்களில் சோதனை.
  • சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்.

அரியானா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் பன்வார் மற்றும் முன்னாள் ஐ.என்.எல்.டி. சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் உள்ளிட்டோருக்கு தொடர்பான சுமார் 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனை யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் மற்றும் கர்னால் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News