தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
குஜராத்தை அவமதித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
#WATCH | Congress party workers celebrate at the Delhi office of the party after Congress crosses the majority mark of 35 seats In Himachal Pradesh amid the ongoing counting of the votes in the state.#HimachalPradeshElections pic.twitter.com/Cb3d3X4s2x
— ANI (@ANI) December 8, 2022
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.
தேர்தல் வெற்றி குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியதாவது:-
குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. குஜராத்தில் வளர்ச்சிப் பயணத்தை மேலும் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் பொது சேவையில் உறுதியாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
குஜராத்தின் புதிய முதல்வர் வரும் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் எனவும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.
முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் - 40, பாஜக - 25, ஆம் ஆத்மி - 0, மற்றவை - 3
18 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் இழுபறி