search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    • தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது
    • இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது

    குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்தது குஜராத் பாஜக. குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    அதேசமயம் இமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.பாஜக 26 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    Live Updates

    • 8 Dec 2022 5:07 PM GMT

      குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. பாஜக அமோக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

      மொத்த தொகுதிகள்- 182

      பாஜக- 156

      காங்கிரஸ்- 17

      ஆம் ஆத்மி கட்சி - 5

      சுயேட்சைகள் - 3

      மற்றவை - 1

    • 8 Dec 2022 3:55 PM GMT

      குஜராத் மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் லட்சியங்களுக்காகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் -ராகுல் காந்தி ட்வீட் 

    • 8 Dec 2022 3:26 PM GMT

      குஜராத் தேர்தல் நிலவரம்:

      மொத்த தொகுதிகள் -182

      முடிவுகள் அறிவிக்கப்பட்டவை -180

      பாஜக- 154

      காங்கிரஸ் -17

      ஆம் ஆத்மி கட்சி- 5

      சுயேட்சைகள்- 3

      மற்றவை -1

      பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை

    • இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
      8 Dec 2022 3:24 PM GMT

      இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

      இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர். 

    • குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்- பிரதமர் மோடி
      8 Dec 2022 2:56 PM GMT

      குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்- பிரதமர் மோடி

      குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

      நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்தனர். அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்

      கடினமாக உழைத்த குஜராத் பாஜக தொண்டர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது.

      இமாச்சல பிரதேச மக்களுக்கும் எனது நன்றிகள், உ.பி. ராம்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது, இமாச்சல் மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • 8 Dec 2022 11:37 AM GMT

      இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

      ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். 

    • 8 Dec 2022 10:51 AM GMT

      குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். மாலை நிலவரப்படி மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அகமதாபாத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சியினரிடையே முதல்வர் பூபேந்திர படேல் உரையாற்றினார்.

    • 8 Dec 2022 10:47 AM GMT

      இமாலச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி, 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது

      பாஜக 13 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது

    • 8 Dec 2022 9:11 AM GMT

      இமாச்சல பிரதேசத்தில் போட்டி வேட்பாளர்களால் பாஜக வெற்றியை இழந்துள்ளது. கின்னவுர், நலகர், குலு, பஞ்சார், தர்மசாலா, டெஹ்ரா ஆகிய 6 தொகுதிகளில் பாஜக தோல்வி அடையும் நிலை உள்ளது.

    • 8 Dec 2022 9:08 AM GMT

      குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றும், அது தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார்.

      ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு, திட்டங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டதால் தேர்தல் முடிவு இவ்வாறு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தனது கருத்தை நிரூபித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×