இந்தியா

நிர்மலா சீதாராமன்

பிப்ரவரி 18ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

Update: 2023-02-04 22:14 GMT
  • ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி கூடுகிறது.
  • இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 18-ம் தேதி கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News