இந்தியா

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி

Published On 2024-01-01 12:52 GMT   |   Update On 2024-01-01 12:52 GMT
  • ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியீடு.
  • மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 10 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த நவம்பர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 68 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News