இந்தியா

ரூ. 2000 நோட்டை வழங்கினால் பணமழை பொழியும்: நூதன மோசடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

Published On 2025-11-04 17:49 IST   |   Update On 2025-11-04 17:49:00 IST
  • 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால் சிறப்பு சடங்குகள் மூலம் பணமழை பொழிய வைப்போம் என ஆசைவார்த்தை.
  • வங்கிகளில் டெபாசிஸ்ட் செய்ய முயன்றபோது ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோசடி அம்பலம்.

2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், விசேஷ சடங்குகள் நடத்தப்பட்டு பணமழை பொய்யும் என மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 10 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு புழக்கத்தில் இல்லை. இருந்தபோதிலும், இது குறித்து அறிந்திராத மக்களிடம் ஒரு குறிப்பிட்ட சீரியல் நம்பர் கொண்ட நோட்டுகளை இந்த கும்பல் சேகரித்துள்ளது. விசேஷ சடங்குகள் மூலம் பணமழை பொழியும் என ஆசைக்காட்டி இவ்வாறு செய்துள்ளனர். போலீசார் இந்த கும்பலிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

குறிப்பிட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் அழித்து வேறு நம்பர் எழுதப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வங்கி கடந்த மாதம் புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி 40 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய முயன்றபோது, கப்பன்பெட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய இரண்டு கூட்டாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின் அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கியில் டெபாசிட் செய்ய அவர்கள் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அடுத்த நாள் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட M, N, O, P மற்றும் G சீரியல் நோட்டுகளை கேட்டு வாங்கியுள்ளனர்.

Similar News